Sunday, October 4, 2009

அவர்கள் மனதில் நாம் இல்லை

மொட்டு , மலர் வகுப்புட்களில் ( எல். கே. ஜி. யு. கே. ஜி ) படிக்கும் குழந்தைக்கு ஆசிரியர்கள் விந்தை கதைகளில் வரும் அதிசய சக்தி வாய்ந்த கதா நாயகர்கள் போல.
ஐந்து கூட்டல் முன்று சமம் ஒன்பது என எழுதி வந்த குழந்தைகளிடம் அப்பா சொன்னார். " ஐந்தும் முன்றும் கூடினால் ஒன்பது வராதம்மா எட்டு தான் வரும். " உடனே குழந்தை " போப்பா உனக்கு ஒன்றுமே தெரியாது. இது எங்க மிஸ் சொன்னது. ஐந்தும் முன்றும் கூடினால் ஒன்பது தான் வரும்."
நேரம் கிடைக்கும் போது டீச்சர் ஸ்டுடென்ட் விளையாட்டு விளையாடும். மிஸ்ஸை போலவே பேசும், நடக்கும், எல்லாம் செய்யும்.
அப்படி அவர்கள் மனதில் இடம் பிடித்த நாம் அவர்கள் நான்கு ஐந்து வகுப்புக்கு வரும்போது அவர்கள் மனதை விட்டு நீங்கியது ஏன்?
யோசிதிததுண்ட?
குழந்தைகள் நான்கு ஐந்து வகுப்புக்கு வரும் போது அவர்களுக்கு விமரிசன சிந்தனை வந்து விடுகிறது. நம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டை கண்டு கொள்கிறது. அவ்வளவுதான் நாம் அவர்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல நீங்க தொடங்குகிறோம். அவர்கள் கண்டுகொள்ளும் சில முரண்பாடுகள் இதோ
  1. வகுப்பில் கற்பிக்கும் எந்த தகவல்களையும் மறக்கக் கூடாது என்று சொல்கிறோம். ஆனால் அடுத்த நாள் நாம் அவர்களிடம் " நேற்றைக்கு எங்கே விட்டோம் " என்று கேட்கிறோம்.
  2. கைஎழுத்து சீர்பட இரட்டை வரி நான்கு வரி எழுத சொல்கிறோம். ஆனால் நம் கைஎழுத்து மிக மிக மோசமாக இருக்கிறது.
  3. குழந்தைகள் தாமதமாக வரும்போது தண்டனை கொடுக்கிறோம். ஆனால் நாம் பல வேளை தாமதமாய் வருகிறோம்.
  4. வாசிக்கும்போது தவறு வரக்கூடாது என்கிறோம் ஆனால் நம் வாசிப்பில் நிறைய தவறுகள் வருகின்றன.
  5. சரியாக திட்டமிடாமல் வகுப்புக்கு வந்து பல நேரம் குழந்தைகள் முன்னால் திணறுகிறோம்
  6. சில குழந்தைகளிடம் மட்டும் அன்புடன் நடந்து கொள்கிறோம். பிறரை கண்டுகொள்ளாமல் விடுகிறோம்.
  7. சிலவேளை சில குழந்தைகள் சந்தேகம் கேட்டால் நாம் கோபம் கொள்கிறோம். அல்லது " அது அப்படித்தான் என்றோ பெரிய வகுப்புக்கு போகும்போது தெரிந்துகொள்வாய் '' என்றோ சொல்லி சமாளிக்கிறோம்
  8. வகுப்பில் வேறு நல்ல ஆசிரியர்கள் வந்து சுவையாக வகுப்பெடுதிருப்பர்கள். நம்வகுப்பை அந்த நல்ல ஆசிரியரின் வகுப்போடு ஒப்பிட்டு பார்க்கிறது. நாமோ அந்தநல்ல ஆசிரியர் போல மாற முயற்சி செய்வதுமில்லை.
இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
குழந்தைகளுக்கு பிடித்த பாடம் எதுவென்று கேளுங்கள். ஏன் பிடித்து என்று கேளுங்கள். அந்த ஆசிரியரை பிடித்துதான் காரணம் என்பதை கண்டுகொள்ளலாம்
நாம் நம்மிடம் உள்ள சில குறைகளை நீக்கும் முயற்சியில் ஏற்ப்படுவோம். குழந்தைகளின் மனதில் இடம் பிடிப்போம்,
அன்புடன்
ராஜேந்திரன்

No comments:

Post a Comment